பாகம் 3
இரண்டு பாகங்களை எப்படியோ முடித்து விட்டேன்.இப்போ 3 வது பகத்த எழுத ஆரம்பிச்சு இருக்கேன்.
நிலா மத்தவங்க சொல்றத கேக்கற பொண்ணு இல்ல ஆன பொதுவாகவே மனுஷ மனம் என்பது யாராச்சும் கிள்ளி விட்டா தப்போ சரியோ என்று யோசிக்க ஆரம்பித்து விடும். அது போல் தான் நிலா, லதா சொல்லும் வரை அப்படி ஒரு எண்ணமே வரவில்லை கவியின் மேல், ஆன இப்போ அவ சொல்றது போல இருந்தா என்ன பண்றது அப்பா அம்மா எல்லாரையும் சமலிக்கர்து பெரிய விஷயம் தான் இருந்தாலும் ஊர பத்தி நினைக்கவும் வேன்றிருக்கே. சாப்பிட்டு முடித்து விட்டார்கள், லதா ஜாடை மாடையாக கவி இடம் பேச்சு குடுக்க ஆரம்பித்தாள் ஆனால் கவி பிடி குடுக்க வில்லை, சரி என்று நிலாவே களம் இறங்கினாள். லதாவை அலுவலகத்தில் விட்டு விட்டு கவியின் ஐஸ் கிரீம் சாபிட போலாமா என்றாள், நிலாவுக்கு ஐஸ் கிரீம் கொள்ளை பிரியம், இது கவிக்கு நன்றாக தெரியும் அதனால் அழைத்து சென்றான். ஒரு இடம் பார்த்து அமர்ந்தனர், நிலா பேச ஆரம்பித்தாள் என்ன கவி, என்னை காதலிக்கிற யா நேரிடையாகவே கேட்டு விட்டாள் கவிடம். கேட்டு விட்டாள் தான் ஆனால் அவளுடைய மனம் கடந்து அடித்து கொண்டு இருந்தது. இதய துடிப்பு வெளியில் கேட்கும் அளவிற்கு இதயம் துடித்தது. கவிடம் ஒரு அமைதி இருந்தது. அவன் பதில் எதும் சொல்ல வில்லை. வெகு நேரம் சென்றது, கவி நான் உன்ன தான் கேக்கறேன் ஏன் அமைதியா இருக்க எனக்கு பயமா இருக்கு டா என்றாள். கவி நிதானமாக அவளை நிமி்ந்து பார்த்தான். இதான் முதல் முறையாக கவி அவளை நிமிர்த்து பார்ப்பது. அதிர்ந்து போனாள் நிலா. கவியின் பார்வை சுத்தமாக மாறி இருந்தது. என்னடா என்றாள். ஆமாம் நிலா உனக்கே புரியும் என்று நினைத்தேன் என்றான். அவன் மேல் அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. அவனை பார்ததாள் உன்ன பாத்தா எனக்கு ஒரு என்னோட கொழந்த போல தான் தோனுதுடா என்றாள், உன்னோட எல்லா அசைவுகளும் கொழந்த போல தான் இருக்கும் ரொம்ப பெரியவங்க போல லாம் யோசிக்கவே மாட்ட எல்லாமே நானோ இல்ல உன்னோட அண்ணனோ சொல்லணும் உன் அப்பா அம்மா அண்ணா அண்ணி எல்லாரும் உன் மேல பாசமா இருக்காங்கன்னு நான் எத்தன நாள் ஏங்கி போயிருந்தேன் தெரியுமா. உனக்கு என் மேல இப்போ இருக்க இது பெரு காதல் இல்லடா அது ஒரு இனக்கவர்ச்சி கொஞ்ச நாள் ஆன சரியா போய்டும் இப்போ உன்னால நல்லது கேட்டது யோசிச்சு முடிவெடுக்க முடியாது நீ கொஞ்சம் யோசி நான் வேற ஜாதி உங்க வீட்ல அதுகெல்லம் ஒதுக்க மாட்டாங்க எங்க வீட்லையும் அதே பிரச்சன வரும் நான் உன்கிட்ட இருக்கும் போது ரொம்ப பாதுகாப்பா உணரன் அந்த உணர்வு போடாம பாதுக்கொடா சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள். ரொம்ப நேரம் ஆகி விட்டது. இரவு மணி 9 அப்போது தான் உரைத்தது நிலாவிற்கு. இவனோட பேசிக்கொண்டே இருந்ததில் மணி ஆனதே தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்து பையை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டண்ட் க்கு நுழைந்தாள் கவி வந்தான் வாடி நான் கொண்டு போய் விடுகிறேன் என்றான், ஆனால் நிலா ஒத்துக்கொள்ள வில்லை. பாவம் அழுது கொண்டே பஸ் க்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
Bạn đang đọc truyện trên: Truyen2U.Com