Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

Part 30

Party ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. மதிய உணவு அவள் உண்ணவில்லை. காலையில் ஹோட்டலில் சாப்பிட்டது கொஞ்சம் வயறு ரொம்பியது போன்ற உணர்வை கொடுத்து இருந்தது. எல்லா கிளைகளுக்கும் email அனுப்பி விட்டாள் சாயந்திர party க்கு அனைவரையும் வர சொல்லி, அலுவலகத்தை அலங்காரம் செய்யும் பொறுப்பு கவியையும் அலுவலக பணியாளையும் சேர்ந்தது. அதற்கும் நிலா தேவை பட்டாள். கவியை அழைத்து பரிசு வாங்கி வர அனுப்பி வைத்தாள். மாலை சிற்றுண்டி தேநீர், பழரசம் எல்லாம் தேவைகளும் தயார் நிலையில் இருந்தது.

பாலாஜி அண்ணா பாலாஜிக்கு நிகராக வரப்போகும் துணை மேலாளரை அழைக்க சென்று விட்டார். அலுவலகம் மொத்த உறுப்பினர்களும் மிகவும் வேலை பளுவுடன் சுறுசுறு என்று சுற்றிக்கொண்டிருந்தனர். நிலா லதாவிடம் இருந்து முடிக்காமல் இருக்கும் வேலைகளை பெற்றுக்கொண்டாள். லதாவிற்கும் கொஞ்சம் மனது பாரமாகவே இருந்தது. அவளுக்கு தான் நடந்து கொண்ட விஷயங்களால் நல்ல வேலையையும் மக்களையும் விட்டு போவது கொஞ்சம் மன வருத்தத்தை தந்திருந்தது. வேலை பளுவின் காரணமாக ஒன்றும் தோன்றவில்லை. நிலா லதா போனபிறகு கஷ்ட பட கூடாது என்பதற்க்காக, எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொண்டு குறிப்புகள் தயார் செய்து கொண்டிருந்தாள். எதையும் யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை. புதிய துணை மேலாளர் வந்து விட்டிருந்தார். party ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியிருந்தது.

கவி வந்துவிட்டான். அனைவரும் ஒவ்வொருவராக வர ஆர்மபித்து விட்டனர். நிலா வரவேற்ப்பில் கவியுடன் நின்று கொண்டாள். மேலாளர் எல்லோரும் வந்ததை உறுதி செய்து கொண்டு 4 மணி அளவில் party ஆரம்பித்து வைத்தார். எல்லோரும் எல்லாரை பற்றியும் ஏதேதோ பேசிக்கொண்டு சிற்றுண்டி உண்ண ஆரம்பித்தனர். நிலாவிற்கும் கவிக்கும் நல்ல பசி, அவர்களும் உண்டனர். பிறகு மேலாளர் லதா பாலாஜி இருவருக்கும் விடை கொடுத்தார். ஒவ்வொருவராக விடை பெற 5.30 ஆகியது. நிலா பணியாளிடம் அலுவலக சுத்தம் பற்றி கூறி விட்டு கவியை அழைத்து வீட்டிற்கு செல்ல நேரம் ஆனதை கூறினாள். அவர்கள் இருவரும் லதா பாலாஜி இருவருக்கும் பரிசுகள் கொடுத்து பிரியாவிடை தந்தனர். நிலா லதாவை கட்டிக்கொண்டு அழுது விட்டாள். கவி நிலாவை சமாதானம் செய்து அவளை அழைத்துக்கொண்டு ஜீப்பில் வீட்டிற்கு கிளம்பினார்கள்.
நிலா சற்று ஆசுவாச படுத்திக்கொண்டாள், கவி பேச ஆரம்பித்தான். நிலா நீ சொன்னதை யோசிச்சேன். எனக்கு புரியவில்லை. இன்னொருத்தருக்காக நாம ஏன் மாறனும். டேய் அறிவோட தான் பேசரியா, இனிமே நமக்கு இது இடம் இல்லை. இப்போ லதா பாலாஜிக்கு நடந்தது ஒரு எச்சரிக்கை நமக்கு, உன்ன நான் யோசிக்க சொல்லல, என்னோட முடிவை சொன்னேன் அவ்ளோ தான். எனக்கு இன்னும் 6 மாசத்துல வேற வேலைல இருக்கணும் அவ்ளோ தான், நீ சொந்தமா தொழில் ஆரம்பிக்கறது என்னோட ஆசை இல்லை உங்க வீட்ல இருக்கற எல்லாரோட அசையும் அதான். சரி இந்த குமாரை என்ன செய்யறது ஏதாச்சும் idea தரயா. சரி வேண்டாம் விடு நானே சமாளிச்சுக்கறேன்.

ஏண்டீ கேள்வியையும் நீயே கேக்கற பதிலும் நீயே சொல்ற. நான் என்ன சொல்றதுன்னு யோசிச்சுட்டு பாதிலேயே நின்னுடுது. குமார இப்போ நீ என்ன பண்ணனும்னு சொல்றேன். அவன் கிட்ட நீ நேரடியா எந்த கேள்வியும் கேக்காத. அவன் என்ன கேக்கறான்னு பாரு. நாளைக்கு நானும் வரேன் ஆனா ஓரமா நிக்கறேன். பிரச்சனை வந்த சமாளிக்கறது முக்கியம் இல்ல பிரச்சன வராம பத்துக்கறது தான் முக்கியம். சரியா. சரிடா, நீ சொந்தமா தொழில் பத்தி கொஞ்சம் யோசி. உனக்கு எந்த லைன் சரியாய் வரும்னு பாரு. நான் நாளைலேந்து newspaper பார்த்து வேற வேலை தேடறேன். சரி வீட்டு கிட்ட வந்துட்டோம் கொஞ்சம் தள்ளியே நிறுத்து, அம்மாகிட்ட இன்னொரு அடி வாங்க தெம்பில்லை.

கவிக்கு சிறிது முகம் மாறியது, தன்னால் தான் அவள் இந்த நிலையில் இருக்கிறாள் என்பது மறுக்க முடியாத உண்மை என்றே நம்பினான். ஆனால் எவ்வளவு தான் சரியாக இருந்தாலும் இது போல குறுகிய மனப்பான்மை கொண்ட தாய் தந்தையரிடம் இப்படி தான் ஆகும் என்பது நிலாவிற்கு மட்டுமே புரிந்த ஒன்று. கவி கிளம்பு நாளைக்கு பாக்கலாம். நீ வந்திரு காலம்பற. வீட்டிற்கு எட்ட நடையிட்டு சென்றாள். அம்மா தங்கை இருவரும் கிளம்பி தயாராக இருந்தனர். போலாமா என்று உள்ளே நுழைந்தாள். இருடீ உன்னோட தம்பியும் வரட்டும் 3 பேரா போக வேண்டாம், அவனும் வந்தான் கிளம்பி சென்று பார்த்து பார்த்து தாலிகொடி வாங்கினார்கள். வந்து அதனை சுவாமி படம் முன்பு வைத்து நமஸ்கரித்தாள் அம்மா. எடுத்து பத்திரப்படுத்தி விட்டு, இரவு உணவிற்கு தயாரானாள் நிலா. அப்பா வெளியில் சென்றவர் வந்து நகையை பார்த்து விட்டு, உணவை முடித்து அனைவரும் படுத்துக்கொண்டனர்.

படுத்துக்கொண்டே நிலா யோசித்துக்கொண்டிருந்தாள். யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை அவளால். வீட்டில் அத்தனை சுதந்திரம் கிடையாது. வேலை புதிதாக தேட வேண்டும் என்று கூட பெற்றோரிடம் கூற அவளால் முடியவில்லை. குமார் பிரச்சனை கூட சொல்ல மனிதர்கள் இல்லை வீட்டில். எப்படி ஒரு நிலை என்று கவலையுடன் இருந்தாள். அவளுக்கு காதல் செய்து திருமணம் செய்து கொள்வதில் எல்லாம் ஒரு ஈடுபாடு இல்லை. தான் நன்றாக படித்து நல்ல வேலையில் சேர்ந்து பணம் சேர்த்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றே நினைத்தாள். இப்போது எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டு நிதானம் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறாள். சரி இப்போது குமாரை சமாளிக்க வேண்டும், வேறு வேலை தேட வேண்டும் வேறு வேலை தேடுவது அலுவலகத்திற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,  அவ்வளவு தான் பின்னாடி வருவது எல்லாவற்றையும் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்க ஆரம்பித்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com