Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 26

கவியின் அண்ணன் பெயரும் பாலாஜி அதனால் தான் இத்தனை நேரம் அவருடைய பெயரை எங்கும் நான் கூறவில்லை. தேவை இல்லாத குழப்பம் வர வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் கவியின் அண்ணன் என்றே அவர் கதை முழுவதும் இருக்க முடியாதல்லவா. இந்த பாகத்தில் இருந்து அவர் பெயரும் சொல்லப்படும்.

மேலாளர் அறையில் இருந்து 3 வரும் வெளியே வந்திருந்தனர். அம்மா நிலா இன்னைக்கு பண்ண வேண்டிய வேலை எல்லாத்தையும் துணை மேலாளர் பாலாஜி கிட்ட ஒப்படைத்து விட்டு நீ வீட்டுக்கு கிளம்பும்மா. பாலாஜி சார் நீங்க எல்லாத்தையும் ஒரே இடத்தில சேமிச்சு வெச்சுட்டு மேலிடத்திற்கு report பண்ணிடுங்க. நாளைக்கு உங்களுக்கு farewell, அலுவலகத்தில் இருக்கும் எல்லோரும் கேளுங்க நாளையோட நம்ப துணை மேலாளர் பாலாஜி வேற கிளைக்கு மாறுதல் ஆகிறார் நமக்கு புது துணை மேலாளர் முதன்மை கிளையில் இருந்து நாளைக்கு சாயந்திரம் வந்து விடுவார். ஆதலால் நாளைக்கு எல்லோருக்கும் சாயந்திரம் ஒரு party இருக்கு, அதுக்கு arrangements எல்லாம் கவியும் அவரது அண்ணன் பாலாஜியும் பாத்துப்பாங்க. நிலா எல்லா கிளைகளுக்கு invitation mail அனுப்பிடும்மா. அப்பறம் எல்லோரும் கேட்டுக்கோங்க இனிமே இந்த லதா பாலாஜி பிரச்சனையை அலுவலகத்திற்குள்ள யாரும் பேச கூடாது. லதா நாளையோட dismiss ஆகுறாங்க. லதா நீங்க உங்க வேலைகள் எல்லாத்தையும் என்கிட்டே ஒப்படைச்சுடுங்க. நான் வேறு ஆள் யார் இருக்கா பாத்துட்டு அவங்களுக்கு allocate பண்ணிட்றேன். all the best என்று விட்டு நகர்ந்து விட்டார். எல்லோரும் அவருக்கு thanks என்று கூறினார்கள். நிலாவிற்கு இருவரின் வேலை நீக்கமும் புரியவே இல்லை. லதா வேலை நீக்கம் ஆனால் பாலாஜி வேறு கிளை தான் மாற்றம். அநியாயமாக தோன்றியது. கவியின் வார்த்தைக்கு இணங்கி அவள் யாரிடமும் எதுவும் பேசாது வீட்டிற்கு கிளம்பினாள். மணி 4 தான் ஆகி இருந்தது. ஆதலால் பாலாஜி அண்ணா அவளை அழைத்து பாலாஜி லதா இருவருக்கு விடை கொடுத்துவிட கட்டளை இட்டார். அவளும் சென்று அவர்கள் இருவரிடமும் பேச ஆரம்பித்தாள். சாரி சார் எனக்கு என்ன பிரச்சனைனு இப்போ வரைக்கும் புரியல. ஆனா லதா நல்ல பொண்ணு சார் நீங்க வேண்டாம்னு சொல்லாம அவளை கல்யாணம் பண்ணிக்கோங்க சார். உங்களுக்கு அவ பொருத்தமா இருப்பா என்று சிறு பிள்ளைபோல கெஞ்சினாள். லதா ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள், இவளின் நட்பு நம்மீது எவ்வளவு தூரம் இருக்கிறதென்று. லதாவும் தவறு செய்யவேண்டும் என்றெல்லாம் இப்படி செய்யவில்லை. அவளுக்கு தந்தை இல்லை தாயும் தமக்கையுமே. அவள் தாய் இவளை யாருக்கு எப்படி திருமணம் செய்து தருவாரோ, அவன் நல்லவனா காசு பணத்திற்கு குறைவில்லாமல் வருவானா, குணம் எல்லாம் தனக்கு தெரியாது. ஆனால் பாலாஜி நல்லவன். ஆதலால் அவனை திருமணம் இரண்டாவது தாரமாக இருந்தால் கூட பரவால்லை என்று தான் இந்த முடிவை எடுத்திருந்தாள். ஆனால் நடந்தது எல்லாம் முரணாக இருந்தது. இப்போது இந்த ஆசையை குழி தோண்டி புதைக்க வேண்டிய சூழலும் வந்து விட்டது. லதா அழுதுவிட்டாள். அழாத லதா பாலாஜி சார் கிட்ட பேசறேன் என்று திரும்பவும் பேச ஆரம்பித்தபோது, லதா நிலாவிடம். வேண்டாம் நிலா, அவருக்கு வேற பொண்ண பாத்துட்டாங்க, நிச்சயம் ஆயிடுச்சு. என்னால அந்த பொண்ணோட வாழ்க்கை போக வேண்டாம். நான் பாத்துக்கறேன். என் மேல தான் தப்பிருக்கு. நீ எனக்கு friend ஆ கிடைக்க நான் குடுத்து வெச்சுருக்கணும் என்று அங்கே ஒரு பாசப்பிணைப்பு ஏற்பட்டது. அம்மா நிலா நான் கெட்டவன் இல்லம்மா எங்க அம்மா எல்லா ஏற்பாடும் செய்து விட்டு தான் என்ன வர சொன்னாங்க, எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியாம தான் சரின்னு சொல்லிட்டேன் என்று பாலாஜியும் தன்னுடைய கருத்தை தெரிவித்தனர். எல்லோருக்கும் விடை சொல்லிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள் கவியும் பாலாஜி அண்ணாவும் அவளுக்காக காத்திருந்தனர். எதுக்கு எனக்கு wait பண்றீங்க. நான் உங்க கூட வர மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். அப்போது அண்ணி அண்ணனுடைய கைபேசிக்கு அழைத்தார். அண்ணன் அந்த அழைப்பை நிலாவிடம் கொடுத்தார், அண்ணி சொல்லுங்க அண்ணி, நீ கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போ நிலாம்மா வீட்டுக்கு போக இன்னும் நேரம் இருக்கு தானே. நீ வந்தா உனக்கு பிடிச்ச snacks பண்ணி தரேன் என்றதும் சரி அண்ணி வரேன் ஆனா இந்த பண்ணீங்க கூட வர மாட்டேன் நடந்து தான் வருவேன் என்றுவிட்டு கைபேசியை அனைத்து விட்டாள். பாலாஜி அண்ணன் கவி அவளை கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு என்று விட்டு தனது வண்டியில் பறந்து விட்டார். கவி செய்யறதெல்லாம் செஞ்சுருங்க இவளை சமாதானம் செய்யறதை மட்டும் என்கிட்டே குடுத்திருங்க, இவை இதான்னு இன்னும் ஜாஸ்தியா பண்ணுவா, எல்லாம் என் நேரம். என்றது தான் தாமதம் நிலா காதில் அனைத்தும் விழுந்தது. அவனை அடி வெளுத்து விட்டாள், போறாத கொறைக்கு அந்த முதன்மை சாலையில் நடக்கவும் ஆரம்பித்து விட்டாள். கவி ஜீப்பை அவள் பின்னாலே செலுத்திக்கொண்டு கெஞ்சி கொண்டும் வந்தான். நிலா நிலா வாம்மா என் செல்லம்ல என் பட்டு என் ராஜாத்தில என்று 1000 கெஞ்சல்கள். ஆனாலும் நிலா இல்ல இல்ல இல்ல என்று சொல்லிக்கொண்டே நடையின் வேகத்தை கூட்டினாள். நிலாம்மா நீ இவ்வளவு வேகமா நடந்தியான்னா உன் கால் வலிக்கும்மா அப்பறம் எனக்கும் வலிக்கும் என்று காதல் வசனம் பேச அவளுக்கு கொஞ்சம் கோவம் அதிகமாகியது. என்னடா love dialogue அடிக்கற. மயங்கிடுவேன்னு பாத்தியா. போடா நான் போறேன் என்று திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள். இனியும் அவளுடன் போட்டி இட முடியாது என்ற கவி, நிலா நீ இப்போ ஜீப்ல ஏறல நானும் உன்கூட நடக்க வேண்டி தான் வரும். அப்பறம் நான் ஜென்மத்துக்கும் ஜீப் எடுக்கவே மாட்டேன் என்று கத்தினான். அவன் சில விஷயங்கள் சொன்னால் சொன்னபடி செய்யும் பிடிவாதம் உண்டு. எல்லாவற்றின் இந்த முறையை கையாள மாட்டான். நிலா ஜீப்பில் ஏறினாள். சாலையில் சிலர் அவர்களை பார்த்தனர். என்ன இதுகள் இப்படி பண்ணுதுங்க என்று நினைத்து இருப்பார்கள் போல. இருவரும் கண்டு கொள்ளவில்லை. கவி ஜீப்பை start செய்து வீட்டிற்கு சென்றான். ஏன்டா இங்க இருக்கற வீட்டுக்கு வர இத்தனை நேரமா என்று அண்ணி அங்கலாய்த்துக்கொண்டாள். அண்ணி வெறுப்பேத்தாதீங்க, இந்த loosu வண்டியில ஏறாம என்ன நடு road கூட பாக்காம கெஞ்ச உட்டுட்டா. நானே கடுப்புல இருக்கென் நீங்க வேற என்று காட்டமாக பேசினான். அதற்கும் அண்ணி சிரித்தார்கள். அவர்கள் குடும்பம் இது தான் எப்போதும் நிலாவிற்கென ஒரு இடம் உண்டு. நிலாவும் சிரித்தாள். சிரிக்காதடீ கடுப்புல இருக்கேன். என்றதும் இன்னும் சிரித்து காண்பித்தாள், பழுப்பு காண்பித்து அவனை இன்னும் கடுப்பேத்தினாள். கவி ஒரு நிலையில் சிரித்து விட்டான் அவளின் முக பாவங்களை பார்த்து. அண்ணி அதற்குள் மாலை நேர சிற்றுண்டி தயார் செய்து கொடுத்தார்கள். நிலா சாப்பிட்டு டீ அருந்திவிட்டாள். பிறகே கேட்டாள் எதுக்கு அண்ணி வர சொன்னீங்க. லதா பத்தி சொல்றதுக்கு தானம்மா வர சொன்னேன் ஆனா இப்போ அதெல்லாம் முடிஞ்சு போச்சு அதனால அத பத்தி இனிமே பேசவேண்டாம்னு அண்ணா சொல்லிட்டாரும்மா. சரி அண்ணி நேரம் ஆச்சு நான் கிளம்பறேன். இப்போ போனாதான் அம்மா சொல்லிய நேரத்திற்குள் வீட்டிற்கு செல்ல முடியும் என்று யோசித்தே கிளம்பினாள். இன்னும் இருந்து விட்டு போயேன் நிலா அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க வந்துருவாங்க. இல்ல அண்ணி நேரம் ஆயிடுச்சு பரவால்ல நிலா நான் கவி கிட்ட உன்ன வீட்ல விட சொல்றேன். இல்ல அண்ணி அது எல்லா நாளும் சரியா இருக்காது பாவம் அவனுக்குன்னு இருக்கற வேலை எதுவும் நான் செய்ய விட்றதில்ல எப்போவும் என் கூடவே சுத்திட்டு இருக்கான். அவனுக்கும் ஏதாச்சும் இருக்கும் அண்ணி அவன் பாக்கட்டும் நான் கிளம்பறேன். பாத்துப்பேன் என்றுவிட்டு கிளம்பினாள். சிறிது நேரத்திற்கு முன் சிறு பிள்ளை போல் தன்னிடம் வம்பு செய்த நிலாவா அது என்பது போல் இருந்தது கவிக்கு. பெண்கள் எப்போது இப்படி எப்போது அப்படி எதுவும் புரியாது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com