Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 28


நிலாவிற்கு அம்மா சொன்ன எல்லாம் ஒரு பயத்தை தந்திருந்தது. இதற்க்கு மேல் எதையும் இப்போது பேச வேண்டாம் நாளைக்கு அலுவலகத்தில் வேலை நிறைய இருக்கிறது தூங்குவோம் என்று நில்லா படுத்துக்கொண்டுவிட்டாள். மனம் பாரமாக இருந்தது. ஒருபுறம் கவி, மறுபுறம் இப்போ புதுசா குமார் பிரச்சனை, இப்போ அம்மா வேற கல்யாணம் அது இதுன்னு என்று எல்லாம் சூழ்ந்து கொண்டது போல் இருந்தது நிலாவிற்கு. குமார் அவனுடைய behavioral changes இப்போது நிலாவிற்கு கொஞ்சம் வித்தியாசமாகவே பட்டது. அவனுடைய ஆரம்ப கால நட்பில் இருந்து எல்லாவற்றையும் நினைத்து ஆராய ஆர்மபித்தாள். ஆரம்பத்தில் இருந்தே வேறு யாரும் இவனுடைய நட்பு வட்டத்தில் இருந்து இவளுடன் பேசியது இல்லை, குமார் மட்டுமே பேசுவான். குமாரை சுற்றி இருப்பவர்கள் அவனை எப்போதும் கிண்டல் செய்து விளையாடிக்கொண்டே இருப்பார்கள். குமாரின் பூ வாங்கிக்கொடுக்கும் பழக்கம் அதுவும் இப்போது சந்தேகத்தை கொடுத்தது. எப்படி அவன் தினமும் நான் அலுவலகம் கிளம்பும் பொது correct ஆ வாரான், எப்படி தினம் பூ வாங்கறான், இன்னைக்கு அவனுக்கு எப்படி தெரியும் நான் அந்த பஸ் ஸ்டாண்ட் ல நிப்பேன்னு. அது எனக்கே புது பேருந்து நிலையம் ஆச்சே, இன்னைக்கு தானே முதன் முதல்ல அங்க ஏறினேன். அது மட்டும் இல்ல சில நேரங்களில் மாலை அலுவலகம் விட்டு வரும் போது பேருந்து நிலையத்தில் என்னை பார்த்து என்னுடனே வருவானே எனக்காக வரான, எதேச்சையா வரானா, கண்டுபுடிப்போம். கத்திரிக்காய் முத்தினா கடை வீதிக்கு தானே வரணும். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் பழமொழி. உறங்கி விட்டாள். 

மறுநாள் எல்லோருக்கும் நன்றாகவே விடிந்தது. நிலாவிற்கு ஒரு புத்துணர்ச்சி இருந்தது. எதையும் நாம் இனிமே குழப்பிக்கொள்ள கூடாது எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும் எல்லாவற்றையும் விட தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டே விழித்தாள். அவள் தான் நிலாவாயிரற்றே.

நிலவின் அம்மா காலையில் சீக்கரம் எழுந்து ஸ்வாமிக்கு ஏதேதோ செய்து கொண்டிருந்தாள். அம்மா coffee தரயா, ஏண்டீ இன்னைக்கு சாயந்திரம் தாலிக்கொடி வாங்க போனும்னு அப்பா ஸ்வாமிக்கு பூஜ பண்ணிண்டு இருக்கா நானும் சமையல் வேலைல கொஞ்சம் busy யா இருக்கேன், குளிக்காத கூட வந்து coffee கேக்கற, போடீ அப்பா கிட்ட அடி வாங்காம என்று அம்மாவிடம் எப்போதும் போல திட்டு வாங்கியாச்சு. குளித்து விட்டு வந்து coffee குடித்து அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள். ஏண்டீ சமையல் இன்னும் ஆகல, பூஜை ஆகல நீ சாயந்திரம் வந்து சாப்பிடு சீக்கரம் வந்திரு, போகும் போது ஹோட்டல் ல வேணும்னா 2 இட்லி சாப்பிட்டுட்டு போ என்று அம்மா அவளை அனுப்பிவைத்தார். அவள் இன்னும் வீட்டில் இன்று இருக்கும் party பற்றி கூற வில்லை, அடி சாயந்திரம் உறுதி.

பேருந்து நிலையத்திற்கு நடக்க ஆரம்பித்தாள். வேகமான நிமிர்ந்த நடை.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!"

நிலாவிற்கு பாரதியின் புதுமை பெண்ணாக இருப்பது மிகவும் பிடிக்கும். யாருக்கும் அஞ்சாதவள். அதற்க்காக யாரையும் காயப்படுத்தும் குணம் கிடையாது. எப்போதும் வரும் நேரம் இல்லையாதலால் அங்கு குமாரை காணவில்லை, ஆனால் கவி வந்திருந்தான். கவியை பார்த்தவுடன் பழைய நிலாவாக குதூகலம் அவளிற்கு தொத்திக்கொண்டது. கவி என்று கத்தி விட்டாள். அவளுடைய சிரித்த முகம், எப்பவும் போல் இருக்கும் அவளது குழந்தை தனம் அவளது முகத்தில் இன்று இருந்தது எல்லாம் கவிக்கு எல்லாம் மறந்தது. 4 நாட்களாக இருந்த நிலா இன்று இல்லை. அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. டேய் கவி எனக்கு பசிக்குதுடா டா டா டா, என்னடீ இன்னைக்கு இத்தனை டா, என்ன ஆச்சு உனக்கு. போடா டால்டா, என்னடீ ரொம்ப வாய் நீழுது. அப்படி தாண்டா நீளும் என்னடா பண்ணுவ டால்டா என்று வடிவேல் பாணியில் அவனை வம்பிழுக்க அவன் surrender ஆய்டறேன் என்ன இன்னைக்கு இவ்ளோ happy ஆஹ் இருக்க. இல்லடா இனிமே எதைற்கும் கவலை பட கூடாது கொழப்பிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதான் இன்னைக்கு fresh ஆஹ் feel பண்றேன். சரி வா போகலாம் ஜீப்ல. இல்லடா பசிக்குது எனக்கு சாப்பிடணும் மொதல்ல. அப்பறம் நான் உன்கூட கொஞ்சம் பேசணும் அப்பறம் அலுவலகம் போகலாம். லதா பாலாஜிக்கு ஏதாச்சும் gift வாங்கிட்டு போகலாம்.

அவளுடைய இந்த வேகம் எப்போதும் இருப்பது தான் என்றாலும் தன்னால் அவள் இந்த 4 நாட்களாக இருந்த அமைதி அவனுக்கு மிகுந்த வேதனையை அளித்துஇருந்தது. இப்போது தான் அவனுக்கு உயிரே வந்தது போல் தோன்றியது. ஹோட்டல் க்கு சென்றனர். எனக்கு பூரி வேணும்டா கவி. பூரியா ஏண்டீ கலம்பற பூரி not good eat, மொதல்ல இட்லி சாப்பிடு அப்பறம் பூரி order பண்றேன். சரி என்று order செய்து சாப்பிட்டு முடித்தனர். டேய் டேய் எனக்கு ஒரு chocolate ice cream வேணும் ஜீப்ல சாப்டுட்டே போகணும். சரி என்று அதனையும் வாங்கிக்கொடுத்தான்.

ஜீப்பில் பாட்டு போடாத கவி உன்கிட்ட அலுவலகம் போறதுக்குள்ள ஒன்னு பேசணும். சரிம்மா. வா போகலாம் என்று வண்டியை கிளப்பினான். அங்கே அவர்கள் கிளம்பும் நேரம் குமார் அங்கே வந்தான். இவர்கள் பேசியதை காதில் வாங்கினானா என்றெல்லாம் தெரியாது, ஆனால் குமாரை கண்டதும் அவளது முகம் மாறியதை கண்டான் கவி. ஹாய் குமார், எனக்கு அலுவலகத்திற்கு நேரம் ஆயிடுச்சு, சாயந்திரம் அம்மா சீக்கிரம் வேற வர சொல்லிருக்காங்க, சோ நாளைக்கு காலம்பற 8 மணிக்கு நீ வந்திரு நாம பேசலாம் என்றுவிட்டு வா கவி போகலாம் என்று குமாரின் பதிலுக்கு கூட நிற்க வில்லை நிலா. கவிக்கு ஏதோ வித்யாசமாக பட்டது, அன்று குமாருடன் நடந்து கொண்ட விததிற்கும் இன்று நடக்கும் விதத்திற்கும் நிறைய மாறுதல்கள் இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com