Truyen2U.Net quay lại rồi đây! Các bạn truy cập Truyen2U.Com. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் 6

கவிக்கு ஒன்றுமே புரியவில்லை, அவளின் மௌனம் என்றுமே சிக்கல் தான் அவள் மௌனமாக இருந்தால் அது பெரிய புயலின் சின்னம், ஒன்று அழுவாள் இல்லையென்றால் பயங்கரமாக சத்தம் போடுவாள், கத்தினாள் கூட பரவாயில்லை ஆனால் அதற்கு பிறகு யாரிடம் சத்தம் போடுகின்றலோ அவர்களோடு பேசவே மாட்டாள் இது அந்த அலுவலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரியும் கல்லூரியில் உள்ளவர்களுக்கும் தெரியும் அவளுடன் இருக்கும் எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம் அதனால் யாரும் அவளுடன் சண்டை போட மாட்டார்கள், யாரும் அவளுடைய நட்பை இழக்க தயாராக இல்லை என்றே சொல்ல வேண்டும். அவள் உதவி எல்லோருக்கும் தேவை யார் யாருக்கு என்ன என்ன வேண்டும் என்று தேடி தேடி செய்வாள். கருணை உள்ளம் கொண்டவள் கொஞ்சம் கோபம் வரும் கோபம் கொண்ட இடத்தில் தானே குணமும் இருக்கும்.

கவியின் முயற்சி அவளது மௌனத்தை உடைப்பதிலே இருந்தது. இதற்கிடையில் அலுவலகம் வந்து விட்டிருந்தது. நிலா அலுவலகம் வந்துருச்சு என்றான், அவள் அப்போதும் ஒன்றும் பேசவில்லை அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டது சிக்கல் கொஞ்சம் பெரியது என்று. அவளை அலுவலகத்தில் விடாமல் பக்கத்தில் இருக்கும் கோயிலுக்கு அழைத்து சென்றான். மணி 9 காலை வேளை என்பதால் கொஞ்சம் கூட்டம் இருந்தது. நிலா வா உள்ள போய் சாமி கும்பிட்டு வரலாம் என்றான். அதற்கும் பதில் இல்லை, வண்டியை ஒரு ஓரமாக இருந்த மரத்தின் அடியில் நிறுத்தி விட்டு அவள் கையை பிடித்து இறக்கி கோவிலுக்குள் அழைத்து சென்றான். அவன் காதலிக்கும் பெண் அல்லவா, அவளின் இந்த நிலைக்கும் அவன் தானே காரணம், அவனால் இதனை தாங்க முடியவில்லை. அவனும் இரவெல்லாம் தூங்க வில்லை, ஏன் இரவு உணவும் உண்ண வில்லை இப்போதும் அவன் சாப்பிடவில்லை. அவள் சாப்பிடாமல் நிம்மதி இல்லாமல் இருக்கும் போது தான் எப்படி சந்தோஷமாக எப்பவும் போல இருப்பது, நினைத்துக்கொண்டான். அவனுக்கு இப்போது நிலா சாதாரணமாக அவனுடன் இருந்தாலே போதுமானது என்றே தோன்றியது. கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் வந்து ஒரு புறம் ஓரமாக இருவரும் அமர்ந்து கொண்டனர், நிலா அப்பவும் எதுவும் பேசவில்லை, ஆனால் அவளின் முகம் கொஞ்சம் சாதாரணமாக இருப்பது போல் இருந்தது. நிலா நீ இன்னும் எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற நான் தானே தப்பு பண்ணினேன் அதுக்கு நீ ஏன் உன்ன வருத்திக்கர கேட்டான், நிலா அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள் கண்கள் கலங்கி இருந்தது. கவியின் மனதில் 1000 மாற்றங்கள் வந்து போயின. நிலா ரொம்ப சாதாரணமாக அவனிடம் சொன்னாள், எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க கவி என்று. கவி அதிர்ந்து விட்டான். கவியின் காவிய காதலை அடுத்த பாகத்தில் பார்க்கலாம். அதுவரைக்கும் நிலா கொஞ்சம் இப்படியே இருக்கட்டும்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Com