கார்மேகம்
கருமை நிறம் பூசிய
கார்மேக காதலனே!
உன் கைவிரல் தீண்டிட
காய்ந்து கிடக்கிறாள்
பயிரற்ற உயிரற்ற காதலி!
பகலின் நாயகனாம் கதிரவன்!
அவன் கோபக் கணல் பட்டு
இவள் விழிநீரும் வற்றிப் போக
உன் கருணை கரம் கொண்டு
காதல் மழை பொழிவாயோ?
அல்ல
காற்றில் கரைந்து விடுவாயோ!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Com